×

மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி 25 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர்..! 

 

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இதனால், இந்தியாவில் வர்த்தகம் மட்டுமின்றி சமையல் எரிவாயு (LPG) விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், கத்தார், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதியும் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால், இந்தியாவில் எல்பிஜி விநியோகத்திற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், ‘பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை தடுப்பதற்காக, எல்பிஜி சிலிண்டரின் முன்பதிவு காலம் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், முன்பு 55 நாட்களில் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்தவர்கள் 15 நாட்களில் சிலிண்டரை முன்பதிவு செய்ய தொடங்கியதாக பரவலாக புகார்கள் எழுந்தன.

மேலும், LPG சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை விட சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு தான் எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் முகவர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே போன்ற நாடுகளும் இந்தியாவுடன் எரிவாயு சிலிண்டர் வர்த்தகத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.