மக்களுக்கு அடுத்த ஷாக்..! அதிரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்திய ஷெல் நிறுவனம்..!
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்களை தாண்டி உள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு இந்தியாவில் தனியார் நிறுவனமான நயாரா பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது.நயாரா எனர்ஜி நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 3 ரூபாயும் உயர்த்தியது.
இந்நிலையில், மற்றொரு தனியார் நிறுவனமான ஷெல் இந்தியாவும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.41ம், டீசல் விலை ரூ.25ம் உயர்த்தி உள்ளது.இதனால், இந்த பெங்களூருவில் நிறுவனத்தின் பங்குகளில் சாதாரண பெட்ரோல் லிட்டருக்கு ரூ.119.85க்கும், பவர் பிராண்ட் பெட்ரோல் ரூ.129. 85க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சாதாரண டீசல் லிட்டருக்கு ரூ.123.52க்கும், பிரிமீயம் வகை டீசல் ரூ.133.52க்கும் விற்பனை செய்யப்படுகிறது.