மக்களுக்கு அடுத்த ஷாக்..! காய்கறி விலை, மளிகை பொருட்கள் விலை உயர போகிறது..!
நாமக்கல்லில் கடந்த 11ம் தேதி மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில், ‘மே 15 முதல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க லாரி வாடகை கட்டணம் தற்போதைய கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது.ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அதிக பாரம் ஏற்றும் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் லாரி வாடகைக் கட்டணத்தை இன்று (ஜூன்.15) முதல் 25 சதவீதம் உயர்த்துவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளின் போக்குவரத்து செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய வாடகை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த திடீர் கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும்.