☰
×

மக்களுக்கு அடுத்த ஷாக்..! நவ. 2–4 ல் ரேஷன் ஊழியர்கள் ஸ்டிரைக்..! 

 

 தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா செய்திக்குறிப்பு:

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும். அப்பொருட்களை வழங்குவது நுகர்பொருள் வாணிபக் கழகம் , அவற்றை ஒதுக்கீடு செய்வது உணவுப் பொருள் வழங்கல் துறை, நியாய விலைக்கடை நடத்துவது கூட்டுறவுத் துறை என மூன்று துறைகளின் பங்களிப்பு உள்ளது. பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும்.

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்ய வேண்டும். பிளஸ் 2 கல்வித் தகுதியுடைய விற்பனையாளருக்கு இன்றும் ஒரு அலுவலக உதவியாளர் சம்பளம் கூட பெற முடியாத நிலை உள்ளது. 10ம் வகுப்பு கல்வித் தகுதியுள்ள எடையாளர்கள் கிராம உதவியாளர் சம்பளம் கூட பெற முடியாமல் இருக்கின்றனர். 9வது ஊதிய மாற்றக்குழுவில் ரேஷன் ஊழியர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை செலுத்துவதில்லை. ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும். ரேஷன் ஊழியர்களுக்கு எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்த 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தி எவ்வித தீர்வு எட்டப்படாததால் அடுத்த கட்ட போராட்டமாக நவ. 2, 3, 4 ல் தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம் என்றார்.