×

மக்களுக்கு அடுத்த ஷாக்..! தங்கம் விலை தாறுமாறாக உயர்வு..!  

 

ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் இரண்டையும் அதிரடியாகச் சந்தித்து வருகின்றது.

எனினும் ஒரு சவரன் தங்கத்தின் விலை விரைவில் ரூ. 1 லட்சத்திற்கு கீழ் வரலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய எதிர்ப்பார்ப்புக்கு இடையே தங்கம் இன்றும் விலையேற்றத்தை கண்டிருக்கிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 24) காலை சவரனுக்கு ரூ. 2,720 குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ. 2 ஆயிரம் உயர்ந்திருக்கின்றது. விலையுயர்வை அடுத்து தற்போது தங்கம் சவரன் ஒன்று ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்திற்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.இதேபோல், வெள்ளி விலையும் சற்றே அதிகரித்திருக்கின்றது. காலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 240-க்கு விற்பனையாகிய நிலையில், அது மீண்டும் ரூ. 10 உயர்ந்து ரூ. 250க்கும், கிலோ 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 24) ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 25) சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,800க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,250க்கு விற்பனயான நிலையில், இன்று ரூ.350 உயர்ந்து, ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 250 விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 250க்கு விற்கப்படுகிறது. அதன்படி இன்று கிலோவுக்கு ரூ. 10,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.