மக்களுக்கு அடுத்த ஷாக்..! ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் கட்டணம் உயர்வு!
அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, இதுவரை 3,000 ரூபாயாக இருந்த ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸின் கட்டணம் 3,075 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 75 ரூபாய் உயர்வு என்பது அடுத்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வசதி நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கிடைக்கும். குறிப்பாக, இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் செல்லுபடியாகும் ஃபாஸ்டாக்குகளைக் கொண்ட, மற்றும் வருடாந்திர பாஸைப் பெற விரும்பும் வணிகம் அல்லாத வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு வருடாந்திர பாஸ் ஒரு மிகவும் வசதியான தேர்வாகும். நீங்கள் வருடாந்திர பாஸ் கட்டணத்தைச் செலுத்தியவுடன், உங்கள் ஃபாஸ்டாக்கை மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் தொந்தரவிலிருந்து விடுபடுவீர்கள். இந்த பாஸ் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும். இந்த பாஸின் செல்லுபடி காலம் ஒரு வருடம் அல்லது 200 சுங்கச்சாவடி கடப்புகள், இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை இருக்கும்.
ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸை ஆக்டிவேட் செய்வது எப்படி?
- முதலில் FASTag செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்களைக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
- வருடாந்திர பாஸ் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- கடைசியாக கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.