மக்களுக்கு அடுத்த ஷாக்..! வெயிலால் விலை உயர்ந்த எலுமிச்சை..!
Mar 21, 2026, 04:50 IST
கோடை வெயில் தொடங்க உள்ளதால் எலுமிச்சையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எலுமிச்சையின் தேவை குறைவாக இருந்ததால் சில மாதங்களாக கிலோ ரூ.40க்கு விற்பனையானது. தற்போது வெயில் அதிகரிப்பதால் வியாபாரிகள் அதிகளவில் எலுமிச்சை கொள்முதல் செய்கின்றனர். வரத்தும் குறைவாக இருக்கும் சூழலில் அதன் விலை ரூ.40ல் இருந்து ரூ.120ஆக உயர்ந்துள்ளது.
சில இடங்களில் கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்பனையாகி வருகிறது. பயன்பாடு அதிகரிப்பு, விளைச்சல் மற்றும் வரத்து குறைவாக உள்ளதால் விலையும் உயர்ந்து உள்ளது.