☰
×

மக்களுக்கு அடுத்த ஷாக்..! ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு..!

 

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.50 உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை (அக்.8) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த திடீர் விலையேற்றத்தை தொடர்ந்து, பிற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விரைவில் தங்களது கட்டணங்களை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பேடு (Postpaid) திட்டங்களின் கட்டணங்களை ₹50 உயர்த்தியுள்ளது. அதேவேளையில், ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமில்லா சர்வதேச ரோமிங் சலுகை உள்ளடங்கிய புதிய போஸ்ட்பேடு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் வழங்கும் இந்த இலவச சர்வதேச ரோமிங் சலுகையின் மதிப்பு ₹2,000 ஆகும். தற்போதைய கட்டண உயர்வின் மூலம் போஸ்ட்பேடு கட்டணங்கள் ₹50 உயர்த்தப்பட்டிருந்தாலும், கூடுதல் சலுகைகள் இதில் வழங்கப்படுகின்றன.

இலவச ரோமிங் பேக்கில் அடங்குபவை:

  • 5 ஜிபி (5GB) டேட்டா

  • 60 நிமிடங்கள் இலவச அழைப்புகள் (Outgoing Calls)

  • 25 அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ்கள் (Outgoing SMS)

  • வரம்பற்ற இலவச இன்மிங் எஸ்.எம்.எஸ்கள் (Free Incoming SMS)

  • செல்லுபடி காலம்: 5 நாட்கள்

குடும்ப உறுப்பினர்களுக்கும் சலுகை: இந்தச் சலுகையை வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் செயலி (Airtel Thanks App) மூலம் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். 'பேமிலி பிளான்' (Family Plans) வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் இந்த இலவச சர்வதேச ரோமிங் சலுகை தனித்தனியாகப் பொருந்தும்.

கூடுதல் அம்சங்கள்: அதிவேக 'பாஸ்ட் லேன்' (Fast lane) தொழில்நுட்பம், வரம்பற்ற டேட்டா, ஸ்பேம் மற்றும் போலி இணைப்புகளுக்கு எதிரான வலைப்பின்னல் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இந்த புதிய திட்டம் வருகிறது. மேலும், 'ஏர்டெல் போஸ்ட்பேடு அட்வாண்டேஜ் கிளப்' மூலம் பொழுதுபோக்கு சந்தாக்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், திரைப்பட வெளியீடுகள் மற்றும் இசைக்கச்சேரிகளுக்கான பிரத்யேக அனுமதி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.