மக்களுக்கு அடுத்த ஷாக்..! 100க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் உற்பத்தியை நிறுத்தியது ‘ஆவின்’..!
‘ஆவின்’ வாயிலாக தினமும், 35 லட்சம் லிட்டர் பால், மாநிலம் முழுதும் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த பால் பதப்படுத்தப்பட்டு, கொழுப்புசத்து அடிப்படையில், தரம் பிரித்து, விலை நிர்ணயம் செய்து, பாக்கெட்டுகளில் அடைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. விற்பனைக்கு போக எஞ்சிய பாலில் இருந்து, தயிர், பனீர், வெண்ணெய், நெய், லஸ்ஸி, மோர், யோகர்ட், பால் பவுடர் என, 230க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த, தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சிகளில், படிப்படியாக பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கப் பட்டது. இதன் வாயிலாக , ஆவினுக்கு மாதம், 60 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்து வந்தது. சென்னையில் தினமும், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான, பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாகின. தற்போது ஆவினில், 100க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, நுகர்வோர் மத்தியில் பிரபலமான, பனீர் மற்றும் வெண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. பல வகை மில்க்ேஷக், பால் பவுடர், பாதாம், பிஸ்தா, வால்நட் மிக்ஸ் பவுடர், குக்கீஸ், சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆவினுக்கு பொருட்களை வாங்க, ஆர்வமுடன் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். குஜராத் அமுல், கர்நாடகா நந்தினி பால் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் விற்பனை, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆவின் விற்பனை சந்தையை, ஆந்திராவின் தனியார் பால் தயாரிப்பு நிறுவனங்கள் மெல்ல கையகப்படுத்தி வருகின்றன.
இதே நிலை தொடர்ந்தால், ஆவினை இழுத்து மூடும் நிலை உருவாகி விடும். அதை தவிர்த்து, ஆவினை பழைய நிலைக்கு கொண்டு வர, முதல்வர் விஜய் நட வடிக்கை எடுக்க வேண்டும்.