×

மக்களுக்கு அடுத்த ஷாக்..!! பரோட்டா விலை ரூ.25ஆக அதிகரிப்பு! 

 

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வர வேண்டிய சச்சா எண்ணெய் மற்றும் சமையல் காஸ் வரத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, நம் நாட்டில் வணிக காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்ள சந்தையில் ஒரு சிலிண்டர் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னையில் முதலில் டீ, காபி, வடை, பஜ்ஜி விலை உயர்த்தப்பட்டது. அதன் பின் இட்லி, தோசை, பூர், பொங்கல், ஆம்லெட், சாப்பாடு, பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது.

தற்போதும் மேலும் மக்களுக்கு ஒரு இடியாக சென்னையில் சில உணவகங்களில் ஒரு பரோட்டா 25 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் பேச்சுலர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். 


சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சூழல் மற்றும் எரிபொருள் இறக்குமதி சிக்கலால் ஒரு வணிக சிலிண்டர் தற்போது சந்தையில் ₹5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

உணவுகளின் புதிய விலை நிலவரம் (சிறிய ஹோட்டல்கள்):

உணவு வகை       பழைய விலை (₹)       புதிய விலை (₹)

இட்லி (2)                         20                                 30
கல் தோசை (2)            40                                  60
பொங்கல்                     30 - 40                           50-60
பூரி  (2)                           40                                  50
ஆம்லெட்                      15                                  25-30
சிக்கன் பிரியாணி    150                                200


இன்று காலை வணிக சிலிண்டர் விலை 990.50 ரூபாய் உயர்த்தப்படுவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2,246.50 ரூபாயில் இருந்து 3,237 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஒருசில ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலையில் ரூ.10 உயர்வு, பரோட்டா ரூ.5 அதிகரிப்பு. 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட பரோட்டா இப்போது 25 ரூபாயாக உயர்ந்துள்ளது.