×

மக்களுக்கு அடுத்த ஷாக்..!! 2வது நாளாக இன்றும் உயர்ந்த தங்கம் விலை..!!

 
தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் போருக்கு பிறகு கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் தங்கம் விலை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த 8 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ. 8 ஆயிரம் குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும், இந்த விலையேற்றம் நிரந்தரமில்லை என்று நிபுணர்களும் நகை வியாபாரிகளும் கூறிய நிலையில், இன்றும் அதிகரித்திருக்கிறது.
நேற்று (ஜூன் 12) ஆபரண தங்கத்தின் விலை 300 அதிகரித்திருக்கிறது. அதன்படி, ஒரு கிராம் ரூ. 13,800-க்கு விற்பனை.சவரனுக்கு ரூ. 2,400 அதிகரித்து ரூ. 1,10,400-க்கு விற்பனை.
நேற்று ஒரு சவரன் ரூ.110,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,800-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு மேலும் ரூ.480 உயர்ந்து ரூ.110,880-க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,860-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.270-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது