×

அடுத்த ஷாக்..! மே 1 முதல் மதுபான விலை உயர்கிறது...! 

 

கர்நாடகாவிலும் மது விலையை அதிகரிக்க உள்ளது. வரும் மே 1ஆம் தேதி முதல் கலால் வரி அமைப்பை மாற்றியமைக்க, கர்நாடக அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக அரசு வரும் மே 1ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்த இருப்பதாக கூறப்படும் புதிய மதுபானக் கொள்கையானது, கன அளவு ஆல்கஹால் (ABV) அடிப்படையிலான வரி விதிப்பு முறைக்கு மாறுகிறது. இந்த புதிய கட்டமைப்பின் கீழ், ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள ஆல்கஹால் அளவின் அடிப்படையில் கலால் வரி கணிக்கிடப்படும். இதன் விளைவாக, அதிக ஆல்கஹால் செறிவு கொண்ட மதுபானங்களுக்கு அதிக வரிகள் விதிக்கப்படும். குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்களின் விலை குறையலாம். இருப்பினும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விஸ்கி, ரம், பிராந்தி, ஜின் போன்ற இந்திய தயாரிப்பு வெளிநாடடு மதுபானங்களில் குவாட்டர் பாட்டிலுக்கு (180 மில்லி) சுமார் ரூ.15 முதல் ரூ.25 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்லாப் வாரியான கலால் வரி மாற்றம்

  • முதல் அடுக்கு - 80 ரூபாயில் இருந்து 95 ரூபாய்
  • 2வது அடுக்கு - 95 ரூபாயில் இருந்து 110 ரூபாய்
  • 3வது அடுக்கு - 120 ரூபாயில் இருந்து 135 ரூபாய்
  • 4வது அடுக்கு - 150 ரூபாயில் இருந்து 170 ரூபாய்

ஒரு ஃபுல் மதுபான பாட்டிலின், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை என்பது ரூ.50 - ரூ.100 வரை உயரும், 

பீர்களின் விலை உயருமா?

அதிக ஆல்கஹால் அளவு கொண்டு ஸ்ட்ராங்க் பீர் உள்பட பீர்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் வழக்கமான பீர்களின் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது.