×

தமிழகத்திற்கு வரும் அடுத்த மெகா முதலீடு..! தென்கொரியாவின் மோட்டிலிங்க் நிறுவனம் ஆர்வம்..!

 

தென்கொரியாவுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சென்றுள்ளார். ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான மோட்டிலிங்க் உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வேண்டுகோள் விடுத்தார். 

இது குறித்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தென் கொரியாவில் சியோலில் ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான மோட்டிலிங்க் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினோம். முதல்வர் விஜய் தலைமையில் நடவடிக்கைகள் குறித்து நாங்கள் எடுத்துரைத்தோம்.

வாகன மின்னணுவியலின் முன்னணி உற்பத்தியாளரும், ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு முக்கிய விநியோகஸ்தருமான மோட்டிலிங்க் நிறுவனம் தமிழகத்தில் தனது உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துவதில் மிகுந்த ஆர்வம் வெளிப்படுத்தியது.

தமிழகத்தின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் திறமையான பணியாளர்கள், முன்னணி உலகளாவிய உற்பத்தியாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து, முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.