மத்திய அரசின் அடுத்த செக்..!!வெள்ளி இறக்குமதிக்கும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு..!
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை கடந்த சில நாட்களுக்கு முன்னர், மத்திய அரசு 15 சதவீதமாக உயர்த்தியது.
இந்த 15 சதவீத வரியில் 10 சதவீதம் அடிப்படை சுங்க வரியும், 5 சதவீத வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியும்அடக்கம்.
இந்நிலையில் சில குறிப்பிட்ட வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வருகிறது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 99.9 சதவீத தூய்மையான வெள்ளிக்கட்டிகள் இறக்குமதிக்கு தடையற்ற பிரிவில் இருந்தது.
இது கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ள. குறிப்பிடத்தக்க பிற வெள்ளியும் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த பிரிவுக்கு வெள்ளிக்கட்டிகள் மாற்றப்பட்டு உள்ளதால், இவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் லைசென்ஸ் பெற வேண்டும்.