×

‘வாழ்க உதயநிதி ஸ்டாலின், தளபதி வாழ்க’ மக்களவையில் ஒலித்த குரல் 

 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டு மக்களவையில் திமுக எம்பிக்கள் பதவியேற்றனர். அப்போது ‘வருங்காலம் எங்கள் உதயநிதி்’ எனவும் கூறி திமுக எம்பிக்கள் சிலர் பதவியேற்றனர்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40-க்கு 40 இடங்களில் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்று வருகின்றனர். அதன்படி, இன்று மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன், தமிழில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.திமுக எம்பி தயாநிதி மாறன், வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்.... வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டார்.