அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்... தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை மீதும் கடன்..!!
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இதில் கடந்த 2021-2026 ஆண்டு காலக்கட்டத்தில் ரூ4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது முதல் 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட, இந்த 5 ஆண்டுகாலங்களில் வாங்கிய கடன் அதிகம்.
மூலதன செலவினங்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி, விகிதம் 8.3 சதவீதமாக உள்ள நிலையில், கடன் வளர்ச்சி விகிதம் 14.3 சதவீதமாக உள்ளது, முதலீடு செய்வதற்காக அல்லாமல், அன்றாட செலவுகளுக்காக கடன் பெறுவதை இது குறிக்கிறது என வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார். மேலும், கடன் கூட்டு ஆண்டு வளர்ச்சி, விகிதம் 14.3 சதவீதமாகவும், மூலதன செலவின கூட்டு ஆண்டு வளர்ச்சி 8.3 சதவீதமாகவும், உள்ளது. ஒவ்வொரு 1 ரூபாய் புதிய மூலதன செலவிற்கும் 2.26 ரூபாய் கடன் பெறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ1,28,934 லட்சம் கடன் இருப்பதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் மரிய வில்சன், பிறக்கும் குழந்தைகளின் பெயரில் இருக்கும் கடன் குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தமிழக பொருளாதாரத்திற்கு 1 ரூபாய் பங்களிக்கும் முன்பே இந்த கடன் பொறுப்புடன் பிறக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கடன் கூட்டு ஆண்டு வளர்ச்சி, விகிதம் 14.3 சதவீதமாகவும், மூலதன செலவின கூட்டு ஆண்டு வளர்ச்சி 8.3 சதவீதமாகவும், உள்ளது. ஒவ்வொரு 1 ரூபாய் புதிய மூலதன செலவிற்கும் 2.26 ரூபாய் கடன் பெறப்படுகிறது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதிச் சிக்கலில் இருக்க இந்த 4 தான் முக்கிய காரணங்கள் - பட்டியல் போட்ட நிதியமைச்சர்
தமிழ்நாடு நிதிச் சிக்கலில் இருக்க இந்த 4 நான்கும் தான் முக்கிய காரணங்கள் என்று பட்டியலிட்டுள்ள நிதியமைச்சர் மரிய வில்சன், நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பின் அளித்த பேட்டியில், ஆண்டுக்கு ரூ25000 கோடிக்கு அதிகமாக செலவாகம் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி வருவாய் ஆதாரங்களை உருவாக்கவில்லை. அடுத்து மிக முக்கியமான வரி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி நிதி திட்டம் ஒருநாள் முடிவுக்கு வரும் என்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் அந்த மாற்றத்திற்காக நடவடிக்கைள் பொதுவாக மேற்கொள்ளப்படவில்லை. அடுத்து அன்றாக நிதி சிக்கல்களை சமாளிப்பதற்காக மூலதன செலவுகள் தொடர்ந்து பலியிடப்பட்டன. அதன் மூலம் ரூ31050 கோடி மதிப்பிலான சொத்து உருவாக்கும் வாய்ப்பு இழக்கப்பட்டது. அடுத்து மாநில பொதுத்துறை நிறுவனங்களில் நீண்டகாலமாக இருந்து வந்த கட்டமைப்புகள், பலவீனங்கள், சரி செய்யப்படாமல் விடப்பட்டன என்று கூறியுள்ளார்.
கடந்த 2021-2026 ஆண்டு காலக்கட்டத்தில் ரூ4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது முதல் 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட, இந்த 5 ஆண்டுகாலங்களில் வாங்கிய கடன் அதிகம். மூலதன செலவினங்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி, விகிதம் 8.3 சதவீதமாக உள்ள நிலையில், கடன் வளர்ச்சி விகிதம் 14.3 சதவீதமாக உள்ளது, முதலீடு செய்வதற்காக அல்லாமல், அன்றாட செலவுகளுக்காக கடன் பெறுவதை இது குறிக்கிறது என வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.