×

சால்வை போர்த்த வந்த ஏழையை தடுத்து கையில் கொடுக்குமாறு கூறிய தவெக அமைச்சர்! இது என்ன நவீன தீண்டாமையா?

 

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சால்வை போர்த்த வந்தவர்களை தடுத்து கையில் கொடுக்குமாறு கூறிய தவெக அமைச்சரின் வீடியோ வைரலாகிவருகிறது.

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில்  தொழிலாளர் நலன் அமைச்சர் முகம்மது பர்வேஸ் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதற்கு முன்பாக மனு அளித்து சால்வை அணிவிக்க வந்தவர்களிடம், சால்வையை கையில் கொடுக்குமாறு கூறிய அமைச்சர், நேரடியாக அணிவிப்பதை தவிர்த்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துவரும் நெட்டிசன்கள், “ஏன் ஏழைங்க சால்வை போர்த்த கூடாதா.? இது என்ன நவீன தீண்டாமையா?” எனக் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

சாமானிய மக்கள் சால்வை போர்த்த முற்பட்டால் அதனை தடுப்பதா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலத்திற்கு மட்டும் தான செயலில் இல்லையா?

மாண்புமிகு அமைச்சராக இருந்தாலும் நீங்கள் மக்கள் பிரதிநிதி தான் என்பதை மறக்காதீர்கள். இந்த பண்ணையார்தனத்தை எல்லாம்… pic.twitter.com/3gjzqdCvCd

— DMK IT WING (@DMKITwing) June 1, 2026


இதேபோல் திமுக ஐடி விங்க் அந்த வீடியோவை எக்ஸ் தளத்தில், “சாமானிய மக்கள் சால்வை போர்த்த முற்பட்டால் அதனை தடுப்பதா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலத்திற்கு மட்டும் தான செயலில் இல்லையா?மாண்புமிகு அமைச்சராக இருந்தாலும் நீங்கள் மக்கள் பிரதிநிதி தான் என்பதை மறக்காதீர்கள். இந்த பண்ணையார்தனத்தை எல்லாம் தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது” எனக் குறிப்பிட்டுள்ளது.