×

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தவெக அமைச்சர்..! சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடியதை தொடர்ந்து அடுத்த சர்ச்சை..!

 

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாநிலக் கல்லூரியில், முன்னாள் கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 52 மரக்கன்றுகள் நடுதல், ரத்ததான முகாம், உடல் உறுப்பு தான உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், அந்த நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார். அதற்கு முன்னதாக கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில், அவர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரி முதல்வரின் அறைக்கு முன்பாக தவெக கட்சி கொடி வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை கிளம்பியுள்ளது.

ஏற்கெனவே பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக் கூடாது எனவும், கட்சி ரீதியான செயல்பாடுகள் மற்றும் பிரசாரங்களுக்கு அனுமதி இல்லை எனவும் கல்வித்துறை அறிவுறுத்திவுள்ளது. மேலும், கல்வி நிறுவன வளாகங்களில் அரசியல் கட்சி செயல்பாடுகள் மற்றும் கட்சிக் கொடிகள் ஏற்றுவதற்கு சட்டப்படி அனுமதி கிடையாது.

அப்படி இருக்க மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெகவின் கட்சி கொடி வைக்கப்பட்டிருந்தது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறிப்பாக, சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் விஸ்வநாதன் சினிமா பாடலுக்கு நடனமாடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியில் தவெக கொடி இடம்பெற்றிருந்தது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரியில் அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்ற விழாவில் த.வெ.க துண்டு அணிந்து பங்கேற்ற நபர்..!#Chennai | #Tree | #PlantTrees | #TVK| #Vivek | #Arulselvi | #PolimerNews | #Pledge pic.twitter.com/rnIMQy7XXb

— Polimer News (@polimernews) June 30, 2026


 

சென்னை மாநிலக் கல்லூரியில் அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்ற விழாவில் த.வெ.க துண்டு அணிந்து பங்கேற்ற நபர்..!#Chennai | #Tree | #PlantTrees | #TVK| #Vivek | #Arulselvi | #PolimerNews | #Pledge pic.twitter.com/rnIMQy7XXb

— Polimer News (@polimernews) June 30, 2026