காருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்... பின்னாடியே துரத்திச் சென்ற பெண் ஊழியர்
கோவை பேரூர்- கோவைப்புதூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடித்து விட்டு பணம் தராமல் தப்பிச் சென்ற கார் ஓட்டுநர் மீது குனியமுத்தூர் போலீஸார் புகார் அளித்தனர்.
கோவை பேரூர்- கோவைப்புதூர் சாலையில் எச்.பி நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. எப்போது பரபரப்பாக காணப்படும் இந்த பெட்ரோல் பங்க்கிற்கு இன்று மதியம் சுமார் 12 மணியளவில் காருக்கு பெட்ரோல் அடிக்க மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் கேட்ட போது, டேங்க் முழுமையாக நிரப்ப வேண்டும் எனக் கூறினார். ஊழியர் சுமார் ரூ.3 ஆயிரத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் ஏ.டி.எம் அட்டை மூலம் பணம் செலுத்துவதாக அந்த மர்ம நபர் கூறிய நிலையில் அதற்கான இயந்திரத்தை பெண் ஊழியர் எடுத்து வந்த போது திடீரென அந்த நபர் காரை வேகமாக அங்கிருந்து எடுத்துச் சென்றார்.