×

பெண்கள் பாதுகாப்புக்கு இனி 'சிங்கப்பெண்' அதிரடிப்படை! முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..! 

 

மகளிர், சிறுமியர் பாதுகாப்புக்காக, காவல் துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இப்படைக்கு, ஐ.ஜி.,யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார்.இதை தொடர்ந்து, நவீன், திவ்யதங்கம் ஆகிய இரண்டு எஸ்.ஐ.,க்கள் உட்பட, 18 போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர். 

இவர்கள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தகவல் தொழிநுட்ப பூங்காக்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (ஜூன் 09) மாலை 5 மணிக்கு முதல்வர் விஜய் துவக்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

சிங்கப்பெண் அதிரடிப்படையின் முக்கிய நோக்கங்கள்

  • பெண்கள் பாதுகாப்புக்காக ஏற்கனவே இருக்கும் 'காவலன் செயலி' மற்றும் 'பிங்க் ரோந்து வாகனங்கள்' தாண்டி, இந்த அதிரடிப்படை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அவசர காலங்களில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு உடனடி மீட்பு மற்றும் பாதுகாப்பு வழங்குதல்.
  • ஐடி காரிடார்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ளுதல்.
  • 100 அல்லது பிரத்யேக அவசர எண்களில் இருந்து வரும் புகார்கள் உடனடியாக இந்த தனிப்படைக்கு மாற்றப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்த சிறப்புப் படையின் மிகப்பெரிய சிறப்பம்சமே, இது சாதாரண காவல் நிலைய எல்லைகளுக்குள் முடங்கிவிடாமல், முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் என்பதாகும்.
  • இதன் மூலம் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் அரசியல் தலையீடுகளோ அல்லது நிர்வாகத் தாமதங்களோ இன்றி அதிரடி நடவடிக்கைகள் சாத்தியமாகும் எனக் கூறப்படுகிறது.
  • சர்வதேச தரத்தில் புதிய சீருடைஇப்படையினருக்கு சர்வதேச போலீஸ் தரத்திற்கு இணையாக முற்றிலும் புதிய மற்றும் நவீன வடிவமைப்புடன் கூடிய சீருடைகள் வழங்கப்பட உள்ளன.
  • சட்டை (Shirt)நேவி ப்ளூ நிற அரைக்கைச் சட்டை.
  • தோள்பட்டைகளில் இரண்டு வெள்ளி நட்சத்திரங்கள்
  • பேண்ட் (Trousers)காகி நிற நேர் தையல் கொண்ட நவீன பேண்ட்.