காருக்குள் பறிபோன 6 வயது சிறுவனின் உயிர்!
Jul 13, 2026, 19:13 IST
ஒரத்தநாடு அருகே நத்தத்தில் காருக்குள் இருந்து 6 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நத்தத்தில் காருக்குள் இருந்து 6 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு விடுமுறை என்பதால் மகனுடன் தம்பி மகன் தமனையும் அழைத்து சென்ற பெரியப்பா, தமன் உள்ளே இருப்பது அறியாமல் தவறுதலாக காரை பூட்டி சென்றார். சிறுவன் தமனை காணவில்லை என பல்வேறு பகுதிகளிலும் தேடிய குடும்பத்தினர், இரவு 7 மணிக்கு காரை திறந்து பார்த்தபோது, சிறுவன் தமன் உயிரற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.