×

ஒவ்வொருவர் மீதும் ரூ.1,28,934 இருப்பதாக அறிவித்த அரசு! ஓடி சென்று கடனை செலுத்திய வழக்கறிஞர்

 

வழக்கறிஞர் ரியாஸ் அகமது என்பவர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் குமாரை சந்தித்து ரூ.1,28,934 தொகைக்கான காசோலையை வழங்கினார்.

தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மரிய வில்சன், “தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ1,28,934 லட்சம் கடன் இருக்கிறது. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தமிழக பொருளாதாரத்திற்கு 1 ரூபாய் பங்களிக்கும் முன்பே இந்த கடன் பொறுப்புடன் பிறக்கிறது” என்று கூறினார்.

இந்நிலையில் `தமிழன்' பட பாணியில் தலைமைச் செயலகத்தில் தனது தனி நபர் மீதான கடனை அமைச்சர் குமாரிடம் செலுத்தினார் வழக்கறிஞர் ரியாஸ். இவர் அமைச்சர் குமாரை சந்தித்து ரூ.1,28,934 தொகைக்கான காசோலையை வழங்கினார். அரசுக்கு நிதிச்சுமை உள்ளதால், நாட்டின் குடிமகனாக எனது கடனை அடைத்துள்ளேன் என்றும் வழக்கறிஞர் ரியாஸ் கூறியுள்ளார்.