கரூர் சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல.. தவெக முறையீடு.. இன்று மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் விசாரணை..!
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதி தண்டபாணி இல்லத்திற்குச் சென்று தவெக சார்பில்கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை தவெக தரப்பு முன்வைத்தது.
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி மனு செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். எனவே இதை தனி அமர்வு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தவெக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த முறையீடு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் இன்று விசாரிக்கப்படும் என்று நீதிபதி தண்டபாணி தெரிவித்ததாக தவெக தரப்பில் செய்தியாளர்களிடம் நிர்மல்குமார் தெரிவித்தார். மேலும் தவெக தரப்பில் சிபிஐ விசாரணையும் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே் இந்த விவகாரம் எந்த திசையில் செல்லும் என்பது இன்று தெரிய வரும்.