×

அதிகாரம், ஆளுமை, தனித்துவம்- விஜய்யின் கோட் சூட்டின் சுவாரஸ்யமான பின்னணி

 

முதல்வராக பதவியேற்ற விஜய்யின் கருப்பு நிற கோட்-சூட் பேசுபொருளாகியுள்ளது.

முதல்வராக பதவியேற்ற விஜய்யின் கருப்பு நிற கோட்-சூட் பேசுபொருளாகியுள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஸ்ஃபிர் அகமது இந்த கோட்-சூட்டை வடிவமைத்துள்ளார். விஜய்யின் “பீஸ்ட்” பட தோற்றத்தை அடிப்படையாக கொண்டு இந்த கோட்-சூட் உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கோட் நிறமாக கருப்பை தேர்வு
செய்தது விஜய்யின் விருப்பமாக இருந்துள்ளது. அதிகாரம், ஆளுமை மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கருப்பு நிறம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.விஜய்யின் உடலமைப்புக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் கோட்டை சீர் செய்ய மட்டும் 2 நாட்கள் எடுத்துள்ளதாம். தமிழ்நாட்டு முதல்வர்கள் பின்பற்றிய வேட்டி-சட்டை பாரம்பரியத்தை உடைத்து, விஜய் கோட்-சூட்டில் பதவியேற்றது கவனம் ஈர்த்துள்ளது. 

இதனிடையே விஜய்யின் உடையை விமர்சித்துள்ள அண்ணாமலை, வேஷ்டி அணிந்து சென்னை வெள்ளத்தை பார்வையிட்ட கருணாநிதி, ஸ்டாலின். கோட், சூட் அணிந்து பதவியேற்ற விஜய் எப்படி செல்ல போகிறார்? கோட், சூட் உடன் செல்வாராமுதல்வர் விஜய்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.