×

பா.ஜ.க.வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது - சு.வெங்கடேசன் எம்.பி., 

 


பாஜகவினரின் அறிவு செயல்பாடுகள் நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருப்பதாக மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.  

உலகின் முதல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது, முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமந்தான் என மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர்  பள்ளி மாணவர்களிடையே உரையாற்றிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்பியுமான அனுராக் தாகூரின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மதுரை தொகுதி எம்.பி., சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

 இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,

பாஜக வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.

நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க
பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.