×

#BREAKING த.வெ.க-வுக்கு ஆதரவு இல்லை - IUML திடீர் அறிவிப்பு

 

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க ஆதரவு இல்லை என IUML அறிவித்துள்ளது.

ஐயுஎம்எல் கட்சி தலைவர்களை 3 முறை த.வெ.க நிர்வாகிகள் சந்தித்து பேசிய நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை என IUML அறிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஐ யு எம் எல் கட்சி ஆதரவு தெரிவித்து விட்டதாக தமிழ்நாட்டின் ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில் நாங்கள் எந்த ஆதரவையும் வழங்கவில்லை என ஐயூஎம்எல் கட்சி மறுத்துள்ளது. தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  நீடிப்பதாகவும் அக்கட்சி தலைவர் காதர் மொகிதீன் விளக்கம் அளித்துள்ளனர். காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள் ஆதரவுடன்,தவெகவுக்கான ஆதரவு எண்ணிக்கை 118 ஆக உள்ளது. இதனிடையே விஜய் நாளை முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் பரவிய நிலையில் ஆளுநர் அழைக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.