இந்திய அணி அபார வெற்றி.. சொந்த மண்ணில் அதிரடி..!!
Oct 1, 2026, 05:10 IST
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
கவுகாத்தியில் இன்று நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. 406 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்தியா 43.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 406 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப்டன் சுப்மன் கில் 223* ரன்களும், ரோகித் சர்மா 101 ரன்களும் எடுத்து சாதனை வெற்றிக்கு உதவினர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 400 ரன்களை சேஸ் செய்வது இதுவே முதல்முறை