×

'சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க விழா ரத்து!

 

மிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெற இருந்த ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்ட தொடக்கவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராக கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்ற ஜோசப் விஜய், பதவியேற்ற உடனேயே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை” திட்டத்திற்கு முதல் கையொப்பம் இட்டார். இந்நிலையில், அந்த சிறப்பு அதிரடி படையில் பணியாற்ற உள்ள காவல்துறையினருக்கு பிரத்தியேக சீருடைகள், நவீன காவல் வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் தொடக்க விழா நாளை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் கலந்து கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் என்ன தெரிவிக்கப்பட்டது
மேலும், இதற்கான முன்னேற்பாட்டு பணிகள்  அவசரமாக  நடைபெற்றன.

தமிழக முதல்வர் விஜய் முதன்முறையாக வெளியில் கலந்துகொள்ளும் திட்ட துவக்க நிகழ்ச்சி என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.தமிழக டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கைகள் மற்றும் அணிவகுப்பு முன்னோட்டம் ஆகிவற்றை ஆய்வு செய்தனர். இந்நிலையில் திடீரென சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் துவக்க நிகழ்ச்சி நாளை நடைபெற இருந்தது ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் முதலில் அறிவித்த திட்டம் அதுவும் முதல் முறையாக கலந்து கொள்ளும் திட்டத்துவக் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது  பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது, குறிப்பாக யுபிஎஸ்சி 3 டிஜிபிக்களில் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பி அதில் ஒருவரை நிரந்தர தமிழக  டிஜிபி நியமனம் செய்து கொள்ள பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளையோ வர இருக்கிற காரணத்தினால் புதிய டிஜிபி தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் நடத்த திட்டமிட்டு நிகழ்ச்சி நாளை ரத்து செய்யப்பட்டு  வேறொரு நாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.