இல்லத்தரசிகள் ஷாக்..!! தங்கம் விலை கிடுகிடு உயர்வு..!!
அமெரிக்க - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை உயரும் என கணிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் தொடங்கி, எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவானதால், மீண்டும் தங்கத்தின் விலை சற்று குறையத் தொடங்கியது.
அந்த வகையில், சென்னையை பொறுத்தவரை ஒரு வாரமாக தங்கத்தில் விலை கிராமுக்கு ரூ.13,500 கீழ் இருந்து வருகிறது.
நேற்று (ஜூலை 20) தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்தது. ஆனால் வெள்ளியின் விலை மாற்றமின்றி விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 21) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.