×

இல்லத்தரசிகள் ஷாக்..!! தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை..!!

 
தங்கம் விலையானது நாள்தோறும் தாறுமாறான மாற்றங்களை சந்தித்து வருகிறது. மேற்காசியாவில் நிகழும் போர் பதற்றம், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, டாலர் மதிப்பு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் விலை மாற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகின்றன. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை குறையும் வரை தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்றம் இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.
உலக சந்தையை பொருத்த வரை, டாலர் மீதான முதலீடு அதிகரித்திருக்கிறது. இதனால் உலக நாடுகள் தற்காலிகமாக தங்கம் வாங்குவதை நிறுத்தியுள்ளன. இதுவும் தங்கம் விலை குறைவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று (ஜூன்.15) ரூ.1,680 உயர்ந்துள்ளது. நேற்று (ஜூன்.14) ஒரு சவரன் ரூ.1,10,880க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,860க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,070க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,80,000க்கு விற்பனையாகிறது.