×

கொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள் சிறப்பு பிரிவு பணிக்கு செல்லுங்கள் : தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, போக்குவரத்து, சிபிசிஐடி, மத்திய குற்றப்பிரிவு, மது விலக்கு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர் இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, போக்குவரத்து, சிபிசிஐடி, மத்திய குற்றப்பிரிவு, மது விலக்கு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்

இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு அமலில் உள்ளதால் கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் செயல்படும் சிறப்பு பிரிவு காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீண்டும் அவர்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்லுமாறு தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அந்தந்த மாவட்டத்தில் மீண்டும் பணியில் சேர உத்தரவு பிறப்பித்துள்ளார்.