×

2 ஏக்கருக்கு குறைவானவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்கும் - தவெக தலைவர் விஜய்..! 

 

தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்  நடைபெற்றது. இதில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த விஜய், 

  • "விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம். 
  • விவசாயத்திற்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் தவெக ஆட்சி நிராகரிக்கும். 
  • நெல் மூட்டைகள் பாதுகாப்பில் முக்கிய திட்டங்கள் வகுக்கப்படும். வேலை வாய்ப்பை உருவாக்குவோம்" 
  • 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வேளாண் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி ..
  • 5 ஏக்கருக்கு அதிகமாக வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடனை 50 சதவீதம் தள்ளுபடி குறித்து ஆலோசனை செய்யப்படும்..
  • இரண்டு ஏக்கருக்கு குறைவானவர்களின்  பிள்ளைகளின் கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்கும்..
  • கல்வி ,மருத்துவம் ,ரேஷன் ,பஸ் வசதி போன்ற அடிப்படை விஷயங்களுக்கு மட்டுமே அரசு முக்கியத்துவம் தரும் .
  • நமது குழந்தைகள் நமது இளைஞர்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை தரப்படும். அரசு வேலை வாய்ப்பு மட்டுமின்றி தனியார் வேலை வாய்ப்புகளுக்கும் வாய்ப்பு தரப்படும் .
  • நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கமிஷன் இருக்காது.
  • 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும். பெண்களுக்கு பெண் எடையாளர். ஆண்களுக்கு ஆண் எடையாளர் பணியாற்றுவர்.
  • நியாயவிலைக் கடைகள் பொருட்கள் அனைத்தும் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என்றார்