×

ரீல்ஸ் போடும் தவெக அரசு விளம்பரத்திற்கு தரும் முக்கியத்துவத்தை மக்களுக்குத் தரவில்லை..! - டிடிவி தினகரன்..!

 

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு முருகன் கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக 87 பக்தர்கள் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு தேவசேனா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில்
மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.2 பேர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது X தள பதிவில் தெரிவித்ததாவது;

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு  முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் என்பது  தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

எனவே, இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ்…

— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 30, 2026