×

காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம்... ரூ.94,000 நெருங்கும் ஒரு சவரன் தங்கம்..!!

 
 வாரத்தின் முதல் நாளான நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. பவுனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு பவுன் ரூ.91,280 ஆக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,410 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.91,840 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 அதிகரித்து ரூ.11,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.169 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று (நவ.11) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ. 11,700க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600 (இன்று)
10.11.2025 ஒரு சவரன் ரூ.91,840 (நேற்று)
09.11.2025 ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 ஒரு சவரன் ரூ.90,560