ஆட்டமே இனிமே தான்..!! டெல்டா வெதர்மேன் பகீர்!
டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: முரசு புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே சுமார் 180 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது ஒரு மேற்கத்திய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிக்கும் (Westerly trough) மற்றும் இந்தோ-பசிபிக் உயர் அழுத்த பகுதிக்கும் இடையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இவ்விரு அமைப்புகளும் புயலை வழிநடத்துவதில் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நண்பகல் வரை அடுத்த சில மணிநேரங்களுக்கு புயல் மிகவும் மெதுவாக நகரும் அல்லது ஒரே இடத்தில் நிலைக்கொண்டு இருக்கும்.
ஆந்திராவின் நெல்லூருக்கு தெற்கே முரசு புயல் இன்று மாலை கரையை கடக்கத் தொடங்கும். புயல் கரையை கடக்கும் முன்பாக வலுவிழக்கக்கூடும் என தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் நிகழ்வு இன்று மாலை தொடங்கி, இரவு வரை நீடிக்கக்கூடும். இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். ஆகையால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.