×

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது என்று அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரேநாளில் 5,652 ஆக இருந் நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசும், சுகாதாரத் துறையும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.
 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது என்று அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரேநாளில் 5,652 ஆக இருந் நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசும், சுகாதாரத் துறையும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்

இதனிடையே கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, முதற்கட்டமாக ரூ. 11,092 கோடியை விடுவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி தொகையானது வட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவு என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கொரோனாவால் தமிழகத்தில் பல சோதனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது என்று அதிமுக எம்பி தம்பிதுரை மாநிலங்களவையில் கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர், தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை உடனே விடுவிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.