எங்கள் ஆட்சி அமைந்தவுடன மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் – ஆர்.பி.உதயகுமார் உறுதி!
பின்னர் பேசிய ஆர்.பி.உதயகுமார் , அதிமுக வெற்றிப்பெற்ற பின்னர், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என தெரிவித்தார்.
மூன்று முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தேன். 4வது முறையாக தேர்தலில் நிற்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனையை போராடி இத்தொகுதிக்கு பெற்றுக் கொடுத்தேன். இத்தேர்தலில் பழனிசாமி முதல்வராகி எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைத்து வருவார். மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். திருமங்கலம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நான் கொண்டு வந்துள்ளேன். திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழிச் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.
'நகாய்' திட்டத்தின் மூலம் சிவரக்கோட்டை, கள்ளிக்குடி அருகே மேம்பால பணிகள் நடக்கின்றன. சிலர் தேர்தலுக்காக உங்களை பார்க்க வருவார்கள். நான் எப்போதும் உங்களுடன் இருப்பவன். 10 ஆண்டுகளாக திருமங்கலம் தொகுதி மக்கள் வளர்ச்சிக்காக பாடுபட்டு உள்ளேன்.
தற்போது திருமங்கலம் தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக நிச்சயம் மாற்றி காட்டுவேன் என்றார்.