×

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 1ல் தொடக்கம்..!

 

கல்லூரி திறப்பு குறித்து கல்லூரிக் கல்வி இயக்குனர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2026-2027ஆம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 ( Shift – I – 101022 மற்றும் Shift – II – 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியல் ஜூன் 2-ம் தேதி வெளியிடப்படும் எனவும், பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி வாரியாக தயார் செய்யப்பட்டு ஜூன் 3-ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 5, 6 தேதிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு ஜூன் 8-ம் தேதி முதல் அந்தந்த பகுதியில் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடைபெறும் எனவும், ஜூன் 8-ம் தேதி முதல் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்படும் எனவும், ஜூன் 15-ம் தேதி முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.