சபாநாயகர் சீட்டில் கெத்தாக அமர்ந்த முதல் பெண்- தவெக ஆட்சியில் நடந்த வரலாற்று சம்பவம்
1922-ல் லார்ட் வெல்லிங்டன் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாற்காலியில் அமர்ந்து தமிழக சட்டமன்றத்தை வழிநடத்தியுள்ளார் எம்.எல்.ஏ சத்யபாமா.
தமிழ்நாடு சட்டப்பேரவை மாற்றுத்தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய தவெக சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா புதிய வரலாற்றை படைத்துள்ளார். அவருக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
சட்டப்பேரவைத் தலைவர்களாக இருந்தவர்கள் பதவிக் காலம் முடிந்தவுடன் அமர்ந்திருந்த நாற்காலிகளை நினைவுப் பொருளாக கொண்டு செல்வது வழக்கம். இதனால் புதிய தலைவர்கள் வரும் போது புதிய நாற்காலியும் செய்ய வேண்டியிருந்தது. 1922-ம் ஆண்டு பேரவைத் தலைவராக இருந்த ராஜ கோபாலச்சாரியாருக்கு வெலிங்டன் பிரபு நாற்காலி ஒன்றை அன்பளிப்பாக கொடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அன்று வழங்கிய நாற்காலி இன்னும் தனது சேவையைத் தொடர்கிறது. இந்த பெருமைமிக்க நாற்காலியில் இன்று முதல் பெண் மாற்று சபாநாயகராக சத்யபாமா MLA அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.