×

தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று தாக்கல்..! மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?

 

நடப்பு நிதி ஆண்​டுக்​கான பொது பட்​ஜெட்டை நிதி அமைச்​சர் மரிய வில்​சன் இன்று (ஆக.5) சட்​டப்​பேரவை​யில் தாக்​கல் செய்​கி​றார். வேளாண் பட்​ஜெட்டை துறை அமைச்​சர் வினோத் நாளை (ஆக.6) தாக்​கல் செய்ய உள்​ளார்.அதன்படி சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது 2026-2027-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். நாளை  (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.

எத்தனை நாள் நடைபெறும்?

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது உள்பட முக்கிய முடிவுகள், அந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதங்கள் 10-ந் தேதி தொடங்கும். அதன் நிறைவில் நிதி அமைச்சர் பதிலளித்து பேசுவார். அதன் பின்னர் இடைவெளி இல்லாமல் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளும் தாக்கலாகி, விவாதத்துக்கு விடப்படும் என்றும், எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 2-ம் வாரம் வரை நீடிக்கலாம் என்றும் தெரிகிறது.

தவெக அரசின் முதல் பட்​ஜெட் என்​ப​தால், பெண்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் அறி​விப்​பு​கள் இடம்​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மகளிர் உரிமைத் தொகை, பால் கொள்​முதல் அதி​கரிப்​பு, இளைஞர்​களுக்​கான வேலை​வாய்ப்பு, நீட் தேர்வு போன்ற விவ​காரங்​களில் நாடாளு​மன்​றத்​தில் சட்​டத் திருத்​தம் கொண்​டுவர வலி​யுறுத்​துதல் போன்​றவை தொடர்​பான அறி​விப்​பு​கள் இடம்​பெறலாம் என்று கூறப்​படு​கிறது.

த.வெ.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளான ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்டவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் திட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளது? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

இதுத​விர, ‘வெற்​றித் தமி​ழ​கம்’ என்ற பெயரிலான அரசின் ஐந்​தாண்டு தொலைநோக்கு திட்​டத்​தில் மகளிர் சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.7,000 கோடி வட்​டி​யில்லா கடனுத​வி, கல்​வியை மாநிலப் பட்​டியலுக்​குக் கொண்​டுவர நடவடிக்​கை, மாண​வர்​கள் உயர் கல்விக்கு பிணை​யின்றி ரூ.20 லட்​சம் வரை கல்விக் கடன், புதிய தொழில்​நுட்​பப்​ பல்​கலைக்​கழ​கம்​ உள்​ளிட்​ட அம்​சங்​கள்​ இடம்​பெறக்​ கூடும்​ என்​றும்​ தகவல்​ வெளி​யாகியுள்​ளது.