லஞ்சம் கொடுக்க யாசகம் கேட்ட விவசாயி
Updated: Sep 10, 2026, 17:40 IST
உளுந்தூர்பேட்டை அருகே பூர்விகச் சொத்தின் கூட்டுப் பட்டாவில் பெயரைச் சேர்க்க விஏஓ லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே பூர்வீக சொத்தின் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகக் கூறி, பணம் இல்லாததால் விவசாயி ஒருவர் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஏஓவை பழிவாங்க புறப்பட்ட மனுதாரர் அப்துல் சலீம் ஷேக், அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி பொதுமக்களிடம் தட்டேந்தி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். கிராம நிர்வாக அலுவலரின் செயல்பாட்டை கண்டித்து பிச்சை எடுத்து விவசாயி மேற்கொண்ட நூதன போராட்டம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.