தமிழ்நாட்டில் மின்சாரத்துறைக்கு தான் அதிக கடன்!
தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில்தான் கடன் அதிகம். மின்வாரிய குழுமத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது. மின் பகிர்மான கழகத்திற்கு ரூ.1,07,305 கோடி கடன், மின் உற்பத்திக் கழகத்திற்கு ரூ.1,03, 128 கோடி ரூபாயாக உள்ளது.
நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி,
அரசு பொதுத் துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து ரூ.13.18 இலட்சம் கோடி கடன் உள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய குழுமத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது..
ஏறத்தாழ 28.217 கோடி ரூபாய் மூலதனச் செலவினம் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டிருக்கும்..
ரூ.28,217 கோடி என்பது சுமார் 1,000 கி.மீ. விரைவுச்சாலை (அ) 30 பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகள் (அ) 2,000 பள்ளிக் கட்டடங்களை உருவாக்கும்..
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கடன் 1,07,305 கோடி ரூபாய்..
தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் கடன் 1,03,128 கோடி ரூபாய்..
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் கடன்: 5,072 கோடி ரூபாய்..
போக்குவரத்து துறைக்கு ரூ72,667 கோடி கடன்..
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் கடன்: 30,965 கோடி ரூபாய்..
போக்குவரத்து துறை ஒரு கி.மீ செலவு ரூ.70.61, வருவாய் ரூ.25.97..
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடன் : 27, 181 கோடி ரூபாய்..
தமிழ்நாடு அரசின் நேரடி கடன் ரூ.10 லட்சம் கோடி தமிழ்நாட்டின் உத்தரவாத கடன் 3 மடங்கு அதிகரித்தள்ளது..
பொதுத்துறை நிறுவன கடன் மற்றும் நேரடி கடன் ரூ.13.18 லட்சம் கோடி..
குடிநீர் வழங்கல் வாரியத்தில் ரூ.7776 கோடி இழப்பு..
தமிழ்நாடு-மிக அதிவேகமாக முதியோர் விகிதம் அதிகரிக்கும் பெரிய மாநிலம்..
உழைக்கும் வயதுடையோர் மக்கள் தொகை தமிழ்நாட்டில் குறைகிறது..
மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்களால் ஆண்டுக்கு ரூ.25000 கோடி செலவீனம்