☰
×

"எடுத்த முடிவில் உறுதி"- திமுக பதிவு 

 

FairDelimitation என்கிற நிலைப்பாட்டில் திமுக அதே உறுதியோடு இருக்கிறது என அக்கட்சி கூறியுள்ளது. 

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது INDIA கூட்டணி தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து INDIA கூட்டணி தலைவர்கள் அனைவரும் சென்னை கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர். சென்னை வந்த INDIA கூட்டணி தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த உடனேயே ஸ்டாலின் அவர்களை வாசலுக்கே வந்து வரவேற்றார். ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற காட்சி அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. அருகில் சோனியா காந்தி அவர்கள் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். பின்னர் ராகுல் காந்திக்கு பொன்னாடை போர்த்தி ஸ்டாலின் மரியாதை செய்தார். அதன் பிறகு இல்லத்திற்குள் நடைபெற்ற சந்திப்பில் INDIA கூட்டணி தலைவர்கள் ஸ்டாலினிடம் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி பேசினர். திமுக INDIA கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், திமுக மீண்டும் கூட்டணிக்குள் வர வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றாக சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திமுக ஆதரவு தெரிவித்ததால் தான் INDIA கூட்டணி தலைவர்கள் பதறியடித்து சென்னைக்கு வந்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு மு. க. ஸ்டாலின் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், "FairDelimitation என்கிற நிலைப்பாட்டில் திமுக அதே உறுதியோடு இருக்கிறது" என பதிவிட்டு அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளது.