ஆட்சியர்களுக்கு பறந்த அதரடி உத்தரவு
Jul 3, 2026, 18:30 IST
தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்கள்(CSC) ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் கள ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்திய நிலையில், தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. பொது மக்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் விரைவாக சான்றிதழ் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சான்றிதழ்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வழங்கப்படுவதை உறுதி செய்யவும்
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.