தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது: நயினார் நாகேந்திரன்..!!
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை;
தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள தவெக அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும். 'ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு' என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் பார்லிமெண்டில் சமமான வலிமையுடன் ஒலிக்கும்.
இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல, மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.
மத்திய அரசு, எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, தவெக அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.