த.வெ.க.,வில் இணையும் தமிழக அரசியல் பிரபலத்தின் மகள்..!!.
Jul 3, 2026, 09:37 IST
தி.மு.க., துணை பொதுச்செயலர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிவாவுக்கு, சூரியா என்ற மகனும், காயத்ரி, டாக்டர் பத்மபிரியா என்ற இரு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்நிலையில், சிவாவின் மகள் காயத்ரி, 2024ம் ஆண்டே த.வெ.க.,வில் இணைந்து, அடையாள அட்டை பெற்றுள்ளார். விரைவில், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் முன்னிலையில், முறைப்படி கட்சியில் இணைய நேரம் கேட்டுள்ளார். இவரது கணவர் வக்கீல் முத்துகுமார், தி.மு.க.,வில் உள்ளார்.