×

கள்ளகாதலியை குத்திக் கொன்ற கொடூரன்

 

ராமேஸ்வரத்தில் இரண்டாவது மனைவி மீதான சந்தேகத்தில், அவரை குத்தி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

ராமேஸ்வரம் காமராஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் கார்மேகம் (வயது 64). இவர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்பொழுது தற்காலிக காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி இறந்ததை தொடர்ந்து பரமக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணுடன்  திருமணம் செய்யாமல் பழகி வந்த நிலையில், கஸ்தூரி மீது சந்தேகமடைந்து  கார்மேகம்  கஸ்தூரியை  கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 

இதுகுறித்து ராமேஸ்வரம் நகர் காவல் நிலையம்   காவல்துறை வழக்கு பதிவு செய்து கார்மேகத்தை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.