×

இந்த மாவட்டங்களில் கொரோனா 2வது அலை : எச்சரிக்கை விடுக்கும் ராதாகிருஷ்ணன்

பொது இடங்களில் மாஸ்க் அணிய விட்டால் உடனே அபராதம் வசூலிக்க மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது, நேற்றைய நிலவரப்படி “வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 567 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 55 ஆயிரத்து 121ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,997 ஆக உள்ளது.கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு 200 ஆக இருந்து வந்த நிலையில்
 

பொது இடங்களில் மாஸ்க் அணிய விட்டால் உடனே அபராதம் வசூலிக்க மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது, நேற்றைய நிலவரப்படி “வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 567 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 55 ஆயிரத்து 121ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,997 ஆக உள்ளது.கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு 200 ஆக இருந்து வந்த நிலையில் தற்போது 500ஐ தாண்டியுள்ளது.இந்த சூழலில் செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணிய விட்டால் உடனே அபராதம் வசூலிக்க மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தி நகரில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அபராதம் விதித்தார். முன்னதாக கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவும் நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர பிறமாநிலங்களில் இருந்து வருவோர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.