தீபாவளி கொண்டாட்டத்தால் மாசடையும் மாநகரம்
Oct 20, 2025, 11:44 IST
தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் மாசடைகின்றன.
தீபாவளி பண்டிகை எதிரொலியாக டெல்லியில் காற்று மாசு 400 புள்ளிகளை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி, வாசுபூர் பகுதியில் காற்று மாசு 402 ஆகவும், அசோக் விகாரில் 386, ஆர்.கே.புரத்தில் 372ஆகவும் பதிவாகியுள்ளது. இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான மாசு கட்டுப்பாட்டு விதிமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நேற்று சென்னை மாநகரில் சராசரியாக காற்றின் தரக் குறியீடு 109 ஆகவும் காற்றின் நுண் துகள்கள் PM 2.5 மற்றும் PM 10 ஆகியவை பெருவாரியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி ஆலந்தூரில் 95 , அரும்பாக்கத்தில் 106 , கொடுங்கையூரில் 68 , மணலியில் 75 , வேளச்சேரியில் 71 என காற்று மாசு பதிவாகியுள்ளது.