×

இப்படி ஒரு முதல்வரா? ஆச்சர்யத்தில் அதிகாரிகள்! மதிய உணவுடன் தலைமை செயலகத்துக்கு வரும் முதல்வர்!! 

 

மதிய உணவை கையோடு கொண்டு வந்து தனது அறையில் உணவு சாப்பிட்டு ஒரு அரசு அலுவலர் போல தலைமைச் செயலகம் வந்து செல்கிறார் முதல்வர் விஜய். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

சட்டசபை நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் எம்.எல்.ஏக்கள் ட்தங்களது சொந்த தொகுதிகளுக்கு சென்று வழக்கமான பணிகளை செய்ய தொடங்கினர். அதேபோல் நேற்று முதல் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள விஜய் தலைமை செயலகம் வந்தார். அரசு ஊழியர் போல காலை 9.55 மணிக்கே தலைமை செயலகம் வருகை தந்த முதல்வர் விஜய், மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மதிய உணவையும் காலையிலேயே கையோடு கொண்டுவந்த அவர், தலைமை செயலகத்திலேயே தனது அறையிலேயே அமர்ந்து அதனை சாப்பிட்டார். பின்னர் மாலை 4 மணிக்கு தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.

இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா? என நெட்டிசன்கள் வியப்பாக கேள்வி எழுப்பிவருகின்றனர்.